அதுப் போதும் எப்போதும் பகுதி 1
ஒப்ஸ் ! சோரிங்க ! தெரிஞ்ஜேத் தான் இடிச்சேன் ! என்றான் எழில் அவனது நண்பர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டு.
தனது மூக்குக் கண்ணாடியைக் கொஞ்சம் சரி செய்துக் கொண்டு அவனையும் அவன் நண்பர்கள் கூட்டத்தையும் முறைத்துப் பார்த்தாள் நிகிலா.
என்னக் கோவமா ? கோவப் படுங்க ! கோவப் படுங்க ! என்று மீண்டும் கீண்டலடித்து கைத்தட்டிச் சிரித்தான் எழில்.
இது வழக்கமாய் இந்த பெண்கள் கல்லூரியின் முன் இருக்கும் பேருந்து நிலையத்தில் நடக்கும் ரேகிங். கல்லூரியின் உள்ளே ரேகிங் செய்வது பாத்தாது போய் இப்போது வெளியிலும் செய்ய ஆரம்பித்திருந்தனர் கல்லூரியின் இறுதி ஆண்டின் வானரப் படைகள்.
சொல்லிச் சொல்லி அலுத்துப் போனவர்கள் பலர். சொந்தப் புத்தி இருக்க வேண்டும் இல்லையேல் சொல் புத்தியாவது உரைக்க வேண்டும் ; இரண்டும் இல்லாதவர்களை என்னத்த சொல்ல என்று கை கழுவி விட்டாயிற்று.
கல்லூரியின் இறுதி ஆண்டில் தலைவிரித்தாடியது இவர்களின் கொட்டம். அதுவும் எழில் என்றாலே பேராசிரியர்கள் முதற் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவார்கள். அவ்வளவுக் குறும்புக்காரப் பயப்புள்ளை அவன்.
சின்ன வயதிலிருந்தே அவன் இப்படித்தான். பாட்டி ! பாட்டி ! பாட்டி ! அவனுக்கு தெரிந்தது எல்லாம் பாட்டி மட்டும் தான். பாட்டியின் முந்தானியில் சுருண்டுக் கொண்டும் அவர் பின்னால் வால் பிடித்து அலைந்ததும் போய் இப்போது ஆள் வளர்ந்து நீ என்னச் சொல்றது நான் என்னாக் கேட்கறது என்ற பாணியில் பாட்டிக்கும் அடங்காத குறும்புக்கார பையனாய் அலைகிறான்.
எழில் இதுவரை ரேகிங் பண்ணாமல் அந்த பேருந்து நிலையத்தில் விட்டு வைத்திருந்த ஓரே ஜீவன் இந்த நிகிலாத்தான். அவளும் இன்று மாட்டி விட்டாள். பாவம் அவள் இன்று என்னாகப் போகிறாளோ. அவள் வாய்ப் பேசா பூச்சு. புத்தகப் புழு. எந்நேரம் ஒரு புத்தகம் கையில் இருக்கும். தோளில் லப்டப் பை மாட்டிக் கொண்டு கண்களில் மூக்குக் கண்ணாடிப் போட்டிருப்பாள். இதுதான் நிகிலா என்று அவளைப் பின் பக்கம் பார்த்தே சொல்லி விடலாம்.
டேய், மச்சான் பாருடா நம்பளப் முறைச்சிப் பார்க்குது இந்த சரக்கு என்றான் எழிலின் நண்பன்.
அட, ஆமா ! மச்சி உன்னைத்தாண்ட முறைச்சிப் பார்க்குது ! எங்க என்னப் முறைச்சிப் பாரு !
என்று வேண்டுமென்றே நெஞ்சைத் தூக்கிக் கொண்டு அவள் முன்னுக்கு சென்று நின்று வம்பிழுத்தான் எழில். அவனையும், அவளையும் சுற்றி ஒரு சிறுக் கூட்டம் கூடியது. எல்லாம் கல்லூரி மாணவர்கள் தான். ஆர்பாட்டத்தின் மன்னனும் அமைதியின் ராணியும் முட்டி மோதுவதைப் பார்க்கக் கூட்டம் கூடாதா என்ன.
என்ன நீ பெரிய மண்டையா ? முறைச்சிப் பாருடினா ரொம்பத்தான் சீன் போடற ! முறைச்சிப் பாருடி ! முறைச்சிப் பாருடி ! என்னடி , நான் இந்தக் கத்துக் கத்தறன் காது விளங்காத செக்கு மாடு மாதிரி பேசாமே இருக்க ?!
என்று வில்லத்தனமாய் நானே ராஜா நானே மந்திரி மாதிரிக் கத்திக் கொண்டிருந்த எழில் பெயரைச் சொல்லி மாணவர்கள் கோஷம் போடத் தொடங்கினர். எழில் ! எழில் ! எழில் ! என்று ஒருக் கூட்டமும், நிகிலா ! நிகிலா ! நிகிலா ! என்றொருக் கூட்டமும் மாறி மாறி கோஷம் போட்டனர்.
எழில் அவனைச் சுற்றி நின்றிருந்தக் கூட்டத்தைக் சிரித்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தான்.
பார்த்தல்ல.... இது நானா சேர்த்தக் கூட்டம் இல்லே ! தானா சேர்ந்தக் கூட்டம் என்றவனை நிகிலா ஒரே எத்து 'அந்த இடத்தில்.' அதுவரை ஆவு ஆவு எனப் பேசிக் கொண்டிருந்தவன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு இருக் கண்களும் வெளி வரும் நிலையில் கலங்கிப் போய் நின்றிருந்தான். கோஷம் போட்ட அத்தனைப் பெரும் அமைதியாயினர். யாரும் எதிர்ப்பார்க்கவில்லை ; நிகிலா இப்படி செய்வாள் என்று. எத்தனையோப் பேர் மனதில் நினைத்திருப்பார்கள் இப்படிச் செய்ய. அவர்களின் சார்பாய் இன்று இவள் செய்து விட்டாள்.
ஆள் காட்டி விரலை ஆட்டி ஜாக்கரதை ! இதுலாம் என் கிட்டச் செல்லாது ! வேறாளப் பாரு ! பெரியப் பருப்பு ! மூஞ்சியப் பாரு ! இஞ்சித் தின்னக் குரங்காட்டம் ! சீ ! போடா ! என்று அவனின் நெற்றியில் நெற்றியடி ஒன்றை வைத்து விட்டு அங்கிருந்து மன்னன் விஜயசாந்திப் போல அனைவரும் பார்த்தவாறே நகர்ந்துச் சென்றாள் நிகிலா.
தொடரும் அதுப் போதும் எப்போதும் !