என் அன்புக்குரிய காதலி

என்னோடு
பேசுபவள்
என்னுள் வாழ்கிறாள்
நானும்
எனை மறந்து
பேசுகிறேன்...

தனிமையில்
பேசும் பழக்கத்தில்
முழுமை
பெற்றவனாக...

வலம்வரும்
எனக்கு உற்ற துணையாக
அவளின்
வார்த்தைகள்
என் மனதில்
உதிக்கிறது....

அவளும்
பேசுகிறாள் நானும்
பேசுகிறேன் வார்த்தைகள்
இல்லாமல்....!

அவளும்
பார்க்கிறாள் நானும்
பார்க்கிறேன் உருவங்கள்
இல்லாமல்.....!

நான் பேசும்
வார்த்தைகளை
உயிராக
நினைப்பவள் என்னுள்
இருப்பவள்...
என் அன்புக்குரியவளே
நீதானடி அன்பே...

எழுதியவர் : லெத்தீப் (6-Mar-14, 1:54 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 88

மேலே