கண்ணீரை கரைந்து காப்பாற்ற கண்ணீர் இல்லாமல் போனதே
என்னை
பத்து திங்கள்
சுமந்தவள் நீயே!
இன்று பயிரை
காத்து இவ்வையகத்தின்
பசி தீர்ப்பவள் நீயே!
வாடிய பயிரைக்கண்டு நீ
வாடியதேனோ!
உன்னைசுற்றி
பிள்ளைகளாய்
பயிர்கள்!
வர்ண பகவானிடம்
வரம் கேட்கிறாயோ!
வந்தென் பிள்ளைகளின்
பசிதீர்பாயோ என்று!
எண்ணெய் தேய்க்கத
சிரத்தைப் போல்
என் பிள்ளைகளின்
சிரங்கள் காய்வதேனோ!
வாரி இறைக்கும்
வள்ளல் பெருமானாய்
வந்தெங்கள் தாகம்
தீர்பாயோ!
வறுமையின்
கோடுகளாய்
வயலின்
பிளவுகள்!
பொட்டல் காடு
இன்று பொன்விளையும்
பூமி என்றுதான்
நினைத்தேன்!
துசு பறக்கும்
சுடுகாடாய்
மாறிடுமோ!
இறைவா!
என் பசி
பொறுத்துக்
கொள்வேன்
என்னை நம்பிய
பிள்ளைகளின்
பசியை எவ்வாறு
தீர்ப்பேன்?
சுயநலம் தெரியா
எனக்கு புது சூச்சமம்
ஒன்றை தருவாயோ!
இவ்வையக மக்கள்
என் பிள்ளை அல்லவா!
இறைவா!
என் ஓலம்
உனக்கு
ஓலை இடாதோ!
கண்ணீர் கரைந்து
காப்பாற்ற என் கண்ணில்
நீர் வற்றிபோனதே!
வர்ண பகவானே
வரம் தருவாயோ!
வானை பார்த்து நான்.....