மௌனம் பேசும்
முதன்முறை அடியை வைக்கும் போது,புதுபுது முகங்களும் ,அனுபவங்களும் நம்மை சுற்றும் போது,நம் மனதினில் புதிய உறவுக்கான உணர்வுகள் பேசும்.....
வகுப்பறையில் உட்கார்ந்து பாடங்களை கவனிக்கும் போது ,நம் பள்ளியின் நினைவுகளும் ,நண்பர்களின் நினைவுகளும் நம் மனதை வருடும் போது ,பிரிவுகள் நினைவாய் பேசும் .......
ஒவ்வொரு நொடி சந்தோஷங்களும் ,சேட்டைகளும் நம்மை சூழ்ந்து கொள்ளும் போது ,நம் உற்சாகத்தின் எல்லை ,உறவுகளாய் பேசும் ......
அன்பிற்கினிய அவளை பார்க்கும் போதும், அழகாய் அவள் பேசி சிரிக்கும் போதும் ,எங்கள் காதலின் வாசங்கள் ,தென்றல் காற்றுடன் பேசும் ......
தேர்வறையில் உட்கார்ந்து ,தெரியாததை யோசிக்கும் போது,எங்கள் கண்கள் ,எதிரில் உள்ள நண்பனின் விடைதாளுடன் பேசும்.....
தேர்வின் அறிக்கை வெளிவந்தவுடன் ,எங்கள் தோல்வியின் சோகங்கள் ,நண்பன் வாங்கித்தரும் நட்புடன் பேசும்.....
கல்லூரி முடியும் வேளையில்,எங்கள் பாசமான உறவுகளின் பிரிவுகள் ,கண்களின் ஓரத்தில் கண்ணீரோடு பேசும் .....
சின்ன சின்ன சில சண்டைகளும் ,பல சொல்லாத காதல்களும் ,எங்கள் இதயத்தை வந்து அடைக்கும் போது ,நினைவுகள் எங்களுடன் இமையாய் பேசும் .......
வகுப்பறையில் நடந்த சேட்டைகளும் ,குறும்புகளும் ,எங்கள் ஆசிரியரின் நாற்காலியுடன் பேசும் .......
இந்த கல்லூரியில் கிடைத்த நினைவுகளும் ,நண்பர்களும் ,உணர்வுகளும் ,உறவுகளும் எங்களை பிரிய காத்திருக்கும் போது ,எங்கள் அனைவரின் மனதிலும் ,,,,,,,,,,,
"""" மௌனம் பேசும் """""