மேக மரம்

வெட்டவெளியில் ஒற்றைமரம்
வெறுமையான பட்டமரம்

வெண்மேகம் மரம்பார்த்து
வெயில்வாட்ட மனம்நொந்து

வெண்சாமரமாய் விரிந்து
விருட்சத்திற்கு அரணாக

தருவெது முகிலெதென
தெரியா வண்ணம்

இதுவதுவாக அதுவிதுவாக
இணைந்து மொத்தத்தில்
மேகமரம் ஆனதுகாண் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Mar-14, 11:35 am)
பார்வை : 207

மேலே