என்னில் உன்னையன்றி

நான் தொலைத்தவை எல்லாம்
முன்பைவிட
அதிகமாகவே கிடைக்கும்....
என்னில் உன்னையன்றி...

ஒவ்வொரு நாளும்
புன்னகைக்குள் மறையும்
என் கண்ணீர் அறியும்,
உன் பிரிவால் நான் கொண்ட
காயங்களையும்,
அதன் வலிகளையும்..

தவமும் நீயே தவறும் நீயே..
எப்படி இனி நான் சுவாசிப்பேன் எந்தன் உயிரே...
கண்டிப்பாக உயிர் வாழ்வேன்,
காற்றில் உந்தன் சுவாசம் தேடி...

எழுதியவர் : அஸ்லுனா (7-Mar-14, 9:20 pm)
சேர்த்தது : ASLUNA
பார்வை : 88

மேலே