எல்லாம் ஒரு அனுபவந்தான்
(கல்யாண மண்டபத்தில் அளவாக சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவனிடம், அவனது அனுபவசாலி நண்பன்...)
அவன் : டேய்...என்னடா பண்றே?
இவன் : ம்ம்...சாப்பிட்டுகிட்டு இருக்கேன்...
அவன் : அது தெரியுது....என்ன இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுற...
இவன் : பின்ன எவ்வளவு சாப்பிட சொல்ற...?
அவன் : அடேய்...கல்யாண மண்டபத்தில சாப்பிடறதுக்கும் ஒரு முறை இருக்குடா... அதாவது.....முத ரவுண்டு சாப்பிடும்போது,இனி அடுத்த ரவுண்டுல சாப்பாடு கிடைக்காதுங்கிறா மாதிரியே சாப்பிடனும்....2வது ரவுண்டு சாப்பிடும்போது, முத ரவுண்டுல சாப்பாடே கிடைக்கலங்கிறது மாதிரி சாப்பிடனும்....புரியுதா.....ம்ஹூம்.... உன்னையெல்லாம் சாப்பிட கூப்பிட்டு வந்தேன்பாரு என்னய சொல்லணும்.....