எம் நட்பு

பள்ளியில் பயிரிட்ட எம் நட்பு - இன்று
பல்கலை சென்று பல பள்ளிகள்
நட்பினைந்து உருப்பெற்ற
இரும்பு கோட்டை நம் நட்பு

தோழியின் துன்பத்தில் துணை நின்றோம்
தோழனின் இன்பத்தில் தோல் பற்றினோம்

ஓர் உணவு பல கைவண்ணத்தில்
பல திசை நோக்கில் அமர்ந்து
பகிர்ந்துண்ட நினைவு
கனவிலும் மகிழவைக்கிறது தோழா !

ஆண் பெண் பேதமின்றி
நட்பினை வளர்த்து
உன் புத்தகம் என் புத்தகமாகி
பரீட்சை நமக்கு கரும்பாகி
வெற்றிக்கு வித்திட்ட
நம் நட்பட தோழா!

தாயின் தேடலும் நட்பின் தேடலும்
சுயனலமின்றிய அன்பு தான் தோழா!

பிரிவென்ற சொல் நம்மை நெருங்குகிறது
மனம் உள்ளே கண்ணீர் வடிக்கிறது
எங்கெங்கோ திசை மாறப்போகிறோம்
என் செய்வோம் நாம்
என் அருமை தோழர்களே!

கண்ணீரில் பிரிந்து - ஒரு நாள்
ஆனந்த கண்ணீரில் இணைவோம் - அன்று
சுகந்திர வானில் மீண்டும் சிறகடிப்போம்
என் அருமை தோழர்களே..........





எழுதியவர் : அன்புடன் விஜய் (17-Feb-11, 5:39 pm)
சேர்த்தது : vijeyananth
Tanglish : yem natpu
பார்வை : 477

மேலே