என்றுமே மகிழட்டும்

​வண்ணத்தில் ஓர் ஓவியம்
எண்ணத்தில் ஒரு காவியம் !

தூரிகையின் வளைவுகளா
தூண்டிடும் சிந்தனைகளா !

கவலைகளின் திவலைகளா
கன்னியவள் முகத்தினிலே !

அச்சத்தின் எச்சங்கள் தானோ
அலைஅலையாய் எழுகிறது !

அபலை அவளின் விழியினிலே
ஆறாத நினைவும் வழிகிறதோ !

சோகத்தின் சுவடுகளா
சோர்ந்திட்ட முகமதிலே !

தோல்வியின் விளிம்பிலா
தோகைமயில் உள்ளத்தில் !

ஏக்கங்கள் வடிந்திட்டு
என்றுமே மகிழட்டும் !


​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Mar-14, 12:00 pm)
பார்வை : 197

மேலே