வேண்டும் விடுதலை

"உன்னை வாழவைக்கிறேன் ...
என்னை உறிஞ்சிக்கொள் "...
நாசி வழி உட் புகுந்து.....
உடலுக்குள் விஷம் உமிழும் ...
மாசுற்ற காற்றிலிருந்து.....
வேண்டும் விடுதலை ....
சுவாசம் தடைப்பட்டு.......
மரணித்தாலும்
மாசற்று புனிதமாய்
நான் மரணிக்க ....
"உனக்கு உணவளிக்கிறேன் ...
என்னில் பயிர்ச் செய் "
உள் வாங்கி ....
என் உழைப்பை
பதிலுக்கு
விளைச்சல்களாய் ......
இரசாயன நஞ்சுக்களை அள்ளித் தரும்....
நெஞ்சில் ஈரமில்லா மண்ணில் இருந்து
வேண்டும் ....விடுதலை....
மரணித்தாலும் ...
மந்த போசனத்தில் ...
நஞ்சுப் புசிக்காமல் .....
சுயமாய் நான் மரணிக்க .......
"உன் தாகம் தீர்க்கிறேன் ...
என்னை அருந்து .."
அருந்திவிட்டு ...
தொழிற்சாலைக் கழிவுகளை
பணத்திற்காக
அதன் கழிவு நீரை.....
என்னை
அருந்தச் சொல்லும்
கொடிய குடி நீரிலிருந்து ....
வேண்டும் விடுதலை ....
தாகத்தில் நான் மரணித்தாலும் ...
சுத்தமாய் இருக்கட்டும் .....
என் உதிரமாவது.....
"உன் பஞ்சம் தீர்க்கிறேன் ...
என்னை ஏந்திக்கொள் ...."
உறைந்திருக்கும் விஷ அமிலங்களை ...
ஓசோன் ஓட்டை வழி நிலம் கடத்தும் ...
அமில மழையிலிருந்து....
வேண்டும் விடுதலை ...
பஞ்சத்தில் நான் மரணித்தாலும் ...
கல்லறை மஞ்சத்திலாவது சாந்தி பெற ....
"உனக்குப் புகலிடம் தருகிறேன் ....
என்னிடம் வா ..".
அன்பாய் அழைத்து ...
அடிமைகளாய் ...
அடிமாடுகளாய் ....
நடத்தும் ...
மனிதர் வாழ்......
நீச்ச
நிலங்களில் இருந்து
வேண்டும் ...
விடுதலை
அகதியாய் மரணித்தாலும் ...
நான்
கௌரவமாய் மரணிக்க .....
" உன்னுடன் வருகிறேன் இறுதிவரை ....
என்னை அரவணைத்துக்கொள் ..."
உயிரோடு உயிராய்க் கலந்து........
பின்னிப் பிணைந்து .....
உணர்வுகளோடு
வாக்குறுதிக்கு புறம்பாய் .
இடை நடுவே......
ஒதுங்கிவிடும்.. .
உறவுகளில் இருந்து ....
வேண்டும் விடுதலை ..
தனிமைக் கொடுமையில்
.நான் மரித்தாலும் ...
ஏமாற்றங்கள் தவிர்த்து மரணிக்க ....
"மோட்சம் வேண்டுமா ....
என்னைத் தழுவிக்கொள் ...."
சிக்கித் சிதைந்தேன் உலக மோகங்களில் ......
வாழும் பொழுதே
மரித்த பின்னும் ....
..மோட்சம் காண
..மோகிக்க வைக்கும்
ஆன்மீகத்திலிருந்து வேண்டும் விடுதலை ....
மரணித்த பின் அடையாவிட்டாலும் ..
மோட்சம்
மரிக்கும் கணமாவது நான் மனிதனாக மரிக்க ..... மோகங்கள் கலைந்து.....