நான் கண்ட வெளிநாட்டு வாழ்க்கை
சொந்தங்கள் கதறி அழ
சோகங்கள் மிகைத்து நிற்க
சற்றேனும் மனமின்றி சட்டென்று வந்து விட்டேன் வெளிநாடு....
வந்தவுடன் கண்டேன் நான் வெளிநாட்டு அவலத்தை
பார்பதற்கே சகிக்கவில்லை அதை பார்த்த கண்ணே எனக்கு தேவையில்லை ....
காலையிலே சாலையிலே கண்ணுற்றேன் நம்மவன் ஒருவனை குப்பைகளை அள்ளுகிறான்.
மாலையிலே கண்ணுற்றேன் அவனை தன மனவேதனையை அள்ளுகிறான் ..
அவனுக்கோ மஞ்சள் நிற அங்கி அதிலே இருக்கிறது அழுக்கெல்லாம் தங்கி அவனோ மனவேதனை பொங்கி கதறுகிறான் கண்ணீராய்...
இன்னொரு நம் நாட்டு நண்பனை கண்டேன்
நூலளவு கம்பியாம் அதில் தொங்குவது அவன் அன்பு தம்பியாம் காரணம் கேட்டேன் வானுயர்ந்த மாளிகையில் கண்ணாடி தொடைகவாம்.
நம்மூர் பெண் ஒருத்தியை அணுகினேன் அவர்க்கு
கத்தம்மா வேலையும் அவள் கத்தாதா நாளே இல்லையாம். அவர்களை பார்க்கவும் வேண்டுமாம் அவர்களுக்கு ஆக்கவும் வேண்டுமாம் அவர்கள் வீட்டை காக்கவும் வேண்டுமாம் கழுகவும் வேண்டுமாம் பின் கண்ணீரால் அழுவவும் வேண்டுமாம்..
இவர்கள் பட்ட துன்பம் போதும்
இனி எவரும் பட வேண்டாம்
பிராத்திக்கிறேன் இறைவனை......