தொலைந்து போன மகாராணி

தலைவாசல் முதல்
பின்கட்டு வரை
என் பேரரசின்
எல்லைகள் விரியும் !
ஒவ்வொரு அறையும்
அறை நிறைந்த பொருளும்
அதன் பெருமையைச் சொல்லும்
இவை எல்லாம் எனக்கே சொந்தம் !
நான் இதன் மகாராணி !
என் ஆணையின் படியே
இங்கு யாவும் அசையும் !
ஆணையிடுகிறேன் ! யாரங்கே !
என் அடுத்த ஆணை வரை
எதுவும் அசையக்கூடாதென !
மெதுவாய் அசைகிறது திரைச் சீலை
அடியெடுத்து நடந்து
அசையும் திரை சீலை ஒதுக்கி
ஒவ்வொரு அறையாய்
தேடி நடக்கிறேன்
இத் தேசத்துள் தொலைந்து போன
மகாராணியைத் தான் !

எழுதியவர் : thilakavathy (11-Mar-14, 11:14 pm)
பார்வை : 135

மேலே