நந்தவனம் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
மகிழ்ச்சியில்
தலையாட்டுகிறது மரம்
நீ ஈரமாகும் போது...!
செழிப்பாய்
நீர் உரமிட்டபின்
நீ பயிராக வளரும்போது ...!
காணுகின்றாய்
கண்ணுக்குள் நிலவு
நீ கனவு காணுகையில் ...!
விழிகள் கேட்கிறது
கண்ணீர் துளிகள்
நீ உரமாகும் போது ..!
புனிதமாகிறது
உனது கருணையில்
நீ நந்தவனம் ஆகும் போது ..!