சாலையோர சங்கீதங்கள்

கருவறையை நான் கண்டதில்லை !
என்னை சுமந்தவள் யார் எனத்
தெரியவில்லை எனக்கு !

பள்ளிக்குச் செல்லும் வயதுடை
பிள்ளை நான் ;சாலையோர
சங்கீதங்கள் நாங்கள் !

தெருவோரத்தில் நின்று
பிச்சை எடுக்கின்றோம் ;
பெற்ற அன்னையை தேடுகின்றோம் !

உடல்கள் கெட்டு உருக்குலைந்தே
போய் உற்றப் பிணி களின்
இருப்பிடமாய் ஆகின்றோம் !

புழுவாய் கிடந்து துடித்துப்
போய் துவளும் எங்கள்
பிறவிக்கு மாற்று ஏதும் உண்டா?

பிஞ்சுக் குழந்தைகள் பெற்று
வரும் அந்த கொஞ்சப் பணத்தினால்
என்ன பயன் ? சொல்லுங்கள் !

சாலைதோறும் இன்று
பள்ளி உண்டு ; அதில் சத்தியமாய்
நாங்கள் உண்டு ; சங்கீதமாய் ....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Mar-14, 5:04 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 76

மேலே