குடிசை நிலா
![](https://eluthu.com/images/loading.gif)
குதித்தும் அழுதும் சிரித்தும்
காலியாகவில்லை வயிறு
மேள தாளமில்லாமல் இசைக்கிறது
வெள்ளை நாக்கை நீட்டிக் கொண்டு.... !
....................................................அருவி
இரவில் மட்டும் எனை
காணவில்லை ஏன்?
நிலா என்னை
சக்களத்தி என்பாளோ....!
...................................தாமரை
நீல ஆடையில்
திடீர் திடீரென்று
வெள்ளை வர்ணம்
அடிக்கிறது ரகசியமாய்...!
.................................விண்கலம்
எத்தனை நாள்
மண்ணிற்குத் திருவிழா .
வானில் சென்று அழகை
ரசிப்போமே திருவிழா அமைத்து...!
..............................................விமானம்
என் இரண்டு கால்கள்
ஓயாமல் அவனிடம்
மாட்டிக் கொள்கிறது
தினமும்...!
....................................கடிகாரம்
விழிகளின்
திறப்புவிழா
அன்று மட்டும் ..!
....................................சிவராத்திரி
ஒட்டு வீட்டில்
குழந்தை அழுகிறது
ஓட்டு வீட்டில் நிலா....!
............................................குடிசை நிலா .