தற்கொலை வேண்டாம்
தோல்வியை கண்டு துவண்டிட வேண்டாம்
துன்பம் கொண்டு துடித்திட வேண்டாம்
நாளை சூடிடும் வெற்றிகள் இருக்கு
நம்பிக்கை உன்னில் வளர்ப்பது சிறப்பு ........
தோல்வியின் நண்பன் தற்கொலைதானே
தோற்றிட்ட பலரது நிலை இதுதானே
சாதல் என்பது தீர்வும் இல்லை
சரியென எடுக்கும் முடிவும் இல்லை ......
வாழ பிறந்த வாழ்க்கை இதுவே
வருவதும் போவதும் எல்லாம் பொதுவே
தோல்வி எவரையும் தொடர்வதும் இல்லை
வெற்றி என்றும் சுமப்பதும் இல்லை ......
இரவும் பகலும் மாறுதல் போலே
இன்பமும் துன்பமும் வருதல் இயற்க்கை
இன்பத்தில் சிரித்து துன்பத்தில் அழுவது
இதுதான் மனிதா உந்தன் செயற்கை .....
கருவறை முதலே அழுதவன் இல்லை
கல்லறை வரைக்கும் சிரித்தவன் இல்லை
காலம் புகட்டும் பாடம் இதுதான்
கற்றுக்கொண்டால் எல்லாம் சரிதான் ......
ஆண்டிட பிறந்த ஆறறிவு ஜீவனே
ஐய்ந்தறிவு ஜீவனிடம் தோற்பதும் நியாயமோ
பறவைக்கும் விலங்கிற்கும் தற்கொலை இல்லை
பாவமோ உன்செயல் நியாயமே இல்லை ......
எதிர்நீச்சல் போட்டிடும் மீனை பாரீர்
எதையும் தாங்கியே இலக்கை சேரீர்
தன்னம்பிக்கை பலம்கொண்டு தற்கொலை தவிர்ப்பீர்
தளர்வில்லா மனம்கொண்டு எதையும் வெல்வீர் .........