ஓர் இரவில் கண்ட முல்லை

கால்கள் பின்னி கொண்டு
சிற்பமாய் அழகு சிந்தும்
நீண்டதோர் கொடியின்
வளைந்த இடையில்
நாணம் கொண்டு
குலுங்கி சிரித்தன
முல்லை மலர்கள்..

வளர் பிறையாய்
இதழ் விரித்த
முல்லையின் அழகில்
சின்னதாய்
தோற்று தான் போனது
சில நாட்களாய்
நோட்டம் விட்டு கொண்டிருந்த
வான் நிலா..

எழுதியவர் : மது (12-Mar-14, 9:39 pm)
பார்வை : 810

மேலே