நீ

என் இதயக் குளத்தில் இருந்து
எகிறி விழுந்ததால் துடிக்கிறதோ
உன் விழி மீன்கள்.

உன் உதடுகளுக்கு சொல்லிவை
உன் கன்னங்களுக்கு கடன்தர வேண்டாம் என்று
என்னை பார்கின்ற போதெல்லாம்
சிவந்து தொலைக்கிறது அது.

உன்னைப் பார்த்த அன்றே
என் கண்களுக்கு வந்துவிட்டது
வைரஸ் நோய்
எந்த பொருளைப் பார்த்தாலும்
உன் உருவமே தெரிகிறது.

தனவான்களின் பணச்செழிப்பில்
வாடும் வறியவர்களைப் போல
வளமான உன் தனங்களால்
வாடிக்கிடக்கிறது உன் இடை.

உன் அமில விழி வீச்சில்
அரித்துப் போய்விட்டது
என் இதயம்
உயிர் கொல்லி நோயைப் போல
என் உளம் கொல்லி நோய் நீ.

இலையுதிர் காலத்தில்
பூமியை மறைத்தப் படி விழும்
இலைகளைப் போல்
உன் நினைவுகளால் முடிக்கிடக்கும்
என் இதயம்.

துண்டில் புழுவுக்கு
ஆசைப்படும் மீனைப் போல்
உன் புன்னகைக்கு ஆசைப் பட்டு
என் சிரிப்பைத் தொலைத்தவன் நான்.

எப்போது உதிரும் என்று தெரியாத
நீ சூடிய மல்லிகைச் சரங்களைப் போல
உன் புன்னகைக்காய் ஆடும்
என் உயிர்.

எழுதியவர் : த.எழிலன் (13-Mar-14, 12:09 am)
சேர்த்தது : vellvizhe
Tanglish : nee
பார்வை : 66

மேலே