என் காதல் கதை பகுதி 12

என் காதல் தோற்றாலும்
என் சோகம் காட்டாமல்
என்னை நான் தேற்றாமல்
புன் சிரிப்பே முகவரியாய்....
எதையோ தேடுவதாய் என் மனம்
தனிமையில் அலைகிறது
சிதைகின்ற நொடியெல்லாம்
இன்னொரு நரகமாய் கழிகின்றது.....
உண்ணும் உணவெல்லாம்
ஆகாத உறவாகி பருகும் நீரெல்லாம்
மெதுவான விஷமாகி
ஒவ்வொரு நொடியிலும்
மரணத்தை உணர்கின்றேன் ....
ஒரு துளி விஷமேன்றாலும்
அதன் வீரியம் அது காட்டும்
காதல் அதுபோல்தான்
நினைவால் நம்மை வாட்டும்
இன்னும் தொடரும் என் காதல் கதை