அம்மா
அன்புக்குச் சம்மதம்
அம்மாவோடு சும்மா வர!!....
அவளிடம் கன்னி கழியாமல்
இருக்கிறது - அன்பு!!...
பொருத்தங்கள் எத்தனையோ
அத்தனையும் அவளுக்குள் அடக்கம்!!...
எத்தனைமுறை வேண்டுமானாலும்
வாக்கெடுப்பு நடத்திக் கொள்ளுங்கள்!!...
உலகத்திலே பாசக்காரி "அம்மா" மட்டுமே!!....
ஈராயிரம் ஆண்டுகள் ஓடிய பின்னும்
மனிதன் பாசக்காரனாய் வேசம் போட்டால்
"அம்மா"வாகத்தான் முடியும்!!....
அவள் கருவாட்டுக் குழம்பு ருசியில்
சிறுவாட்டுக் காசு வாசம் ஒழியும்!!....
அம்மியில கும்மி அரச்சா!!...
பம்மி நிக்கும் குழவி!!...
தள்ளி நிப்பா கிழவி!!...
சுயத்தை பயத்திற்கு
அடகு வைத்து - நாணயத்தை
தன் நடத்தையில் காட்டுபவள்!!....
அரளி விதை அரைத்தாலும்
தன் நுனிநாக்கில்
நக்கிப் பார்க்க தவறாதவள்!!...
நாற்பதுக்கு நாற்பது
"அம்மா" பாசத்துல!!....
மத்தவங்கெல்லாம் சும்மா!!....
அவள் பாசம் சுத்தம்!!...
நேசம் சுத்தம்!!...
கோபம் சுத்தம்!!...
தாபம் சுத்தம்!!...
முத்தம் சுத்தம்!!...அவள்
தருவாள் நித்தம்!!....
நூறு சதவீத பாசக்கார அம்மாவுக்கு
33 சதவீத இட ஒதுக்கீடு
தராவிட்டாலும் பரவாயில்லை
ஒரு மூலையிலாவது இடத்தைக் கொடுங்கள்!!....
வைகை அழகரசு
முத்துலாபுரம்