அம்மா
உன் ஊன் வதைத்து என்னுயிர் தந்தாய்...............
பிறப்பதற்கு முன் சில்லறையிலும்
பிறந்தவுடன் சில்லரையிலும் வைத்தாய்....................
கள்ளமில்லா உள்ளம் கொண்டாய்
வெல்லம் போல் அன்பு தந்தாய்....
என்னை உருவாக்க நீ உருக்குலைந்தாய்......................
தேகம் மெலிந்தும் தேயாமல் அன்பு கொண்டாய்.....................
அன்னையே..........
உன்னை நான் அணைக்கவில்லை,
என்னுடன் இணைக்கிறேன்....
உடலால் அல்ல அன்பெனும் உணர்வால்....................
கட்டியணைத்தில்லை கருவம் வந்த நாள் முதல்........ஆனால்
புருவம் தூக்கி பெருமிதம் கொள்கிறேன்..........இருமாப்பு கொண்ட இந்த பத்தினி தான் என்னை ஈன்றவள் என்று........................
தோளோடு சாய நீ என் தோழியல்ல..............
இருந்தாலும் தோள் கொடுக்கும் தோழியகிறாய்........
தொண்டையில் துக்கம் அடைக்கும்போது....................
குளறும் குரலிலே நான் கூறுவதை அறிவாயே,உன் குரலைத்தான் குயில் வாங்கியதோ கடன்......?????????????????????????
மண்ணில் மத்தளமிடும் அந்த மங்கையின் கீறல் கொண்ட பாதங்களுக்கு மருந்திட ஒரு வாய்ப்பு கிடைக்குமா??????????????
மகளான எனக்கு...................
அம்மா,
நாள் விடிந்தது முதல் விடைபெறும் வரை ஓயாமல் ஓடும் கடிகாரமா நீ...........
ஒருநாளாவது திருநாளாக்கு,
உன் திருப்பணிகளுக்கு விடுமுறை கொள்...
நான் உனக்கு சேவை செய்ய கட்டளையிடு தாயே....................................