பெத்தமனம் கள்ளு

ஒத்தவழி பாதையில
ஆலமர வீதியில
முத்தம்மா பெற்றெடுத்த ஒரு பிள்ளை
மொத்தமா போனதய்யா பாருல...

வாங்கிதின்ன வழியில்ல
வசதியும் தான் சேரவில்ல
போதைக்கு அடிமையாகி போனதால்
பாவி இவவுசுரும் தினம் போகுதே ...

காடுக்கரை இருந்தும் தான்
பாடுபட வழியில்லை
குடிபோதையால போனதையா உடம்பும்தான்
தாய் கொடுத்த பாலுக்கூட உதிரம் தான்...

பெத்தமனம் வாடுது
நொந்து தினம் சாவுது
அதைபார்த்து உன் மனம் கலங்கள
அடுத்த வேலைக்கும் இங்கே உணவில்ல...

ஒத்தையா போனதையா உன்னோட மனசு
மொத்தமா போகலையே என்னோட உசிரு
சுருளிகுச்சி பொருக்கி சேர்த்துவச்ச பணமும்
சுருட்டி போய் குடிக்கும் நீயும் தான் பொறுக்கி!!

வேலைவெட்டி செய்யவேணாம்!!
வேதனையும் தரவேணாம்!
கேடுகெட்டக்குடியைதொலைச்சிபுட்டாபோதுமடா எப்பாடு பட்டேனும் நான் காப்பேனே செல்லம்...

வேண்டாத சாமியில்லை
வேதனையும் தீரவில்லை
நீ மாறிவிட்ட
நீதானே எங்க குலசாமி...

எழுதியவர் : கனகரத்தினம் (15-Mar-14, 12:57 am)
பார்வை : 270

மேலே