மடிந்த முத்தங்கள்

நீ
காதல் சொன்ன நாளில் - உன்
கன்னத்தில் கொடுக்க நினைத்த முதல் முத்தம் - என்
மனதோடு மடிந்து போனது,
ஒரு பிறந்த நாள் அன்று,
யாருக்கும் தெரியாமல் - என்
காலுக்கு கொழுசு அணிவித்து
காற்றாக மறைந்து போனபோது - உன்
கைகளுக்கு கொடுக்க நினைத்த முத்தம்
என் நினைஒடு மறைந்து போனது ...
விபத்துக்குளாகி வீ தியல் கிடந்த - என்னை
தூக்கிக் கொண்டு கண்ணீரோடு
மருத்துவமனை ஓடினாயே - அப்போது
உன் இதழுக்கு கொடுக்க நினைத்த முத்தம் - என்
கண்ணோடு கலந்தது....
என்னை
பெற்றவரின் நலனுக்காக - உன்
உயlராக இருந்த என்னை விட்டு கொடுத்த பொது
உன்னை கட்டி அனைத்து நெற்றியlல்
கொடுக்க நினைத்த முத்தம் - என்
கண்ணீரோடு கரைத்து போனது ..
உனக்கு கொடுக்கப்படாமல்
மறைக்கப் பட்ட முத்தங்கள் மடிந்து போய்
புதைக்கப் படுகின்றன - என் மனதில் உன் நினைவாக.......