சாலையோர சங்கீதம்
சாலையோர சங்கீதங்கள்
-------------------------------
பேபிகாரம்மா இட்லிகடை,
தள்ளுவண்டி கடையாய்..
தேன்குழலும், குருவி ரொட்டியும்
தற்போது செல்லாக்காசான,
ஜந்துகாசுக்கு விற்ற ராக்காம்மா
பாட்டி சுடுகாட்டிலும்
பதார்த்தங்கள் அருங்காட்சிகளிலும்...
பள்ளிக்கூடம் போக வக்கில்லா
ஏகலைவன்கள்.... அன்றைக்கு
ஏகப்போகத்திற்க்கு சாலையை
ஏப்பமிட்ட எட்டடுக்கு மாளிகையில்
மனப்பாட கைதிகள்... இன்றைக்கு
பசுஞ்சோலை மரங்கள்
வானம்பாடி பறவைகள்...
குரங்குகள்...
கோட்டான்கள்...எல்லாம்
காணமல் போய்,
போலியாய் சிரிக்கும்
நெகிழி மரங்கள்....
நடை"பழகும்" ஆட்கள் போய்
நடக்கும் இயந்திரமாய் மாறிய
பொது ஜனம்....
சந்தோசங்களை அள்ளித் தெளித்து
சடங்குகளை நடத்திய வீதியில்
தான்,
தடி எடுத்தவன் எல்லாம்
தண்டல்காரனாய்...
குளங்கள் எல்லாம்
குப்பை மேடுகளாய்.......
என் சாலையோர சங்கீதங்கள்
எனக்குள் முகாரியாய் தான்
இசைக்கிறது....