தொடப்ப கட்டை

தொடப்பக்கட்டை...
முன் குறிப்பு :
அதிரடியான தலைப்பு என
அதிர்ச்சி வேண்டாம்!
அற்புதமான எனக்கு
ஆதரவு தந்து வாக்குகளை பதியுங்கள் ..
புறத்தை தூய்மையாக்கி
அகத்தை ஆனந்தமாக்கும்
என்னை பார்த்து
அலட்சியம் வேண்டாமே !
மாசுக்களுக்கும் பூச்சிகளுக்கும் மரணமளித்து
மனிதர்களின் ஆத்ம சக்திக்கு
ஜனனம் அளிக்கும்
என்னை பார்த்து உதாசீனம் வேண்டாமே !
.
கல் மனம் கொண்ட
கணவர்கள் மனைவியை
கடிந்து கொள்ள
கடினமின்றி என்னை ஆயுதமாக்குவார்கள் ..
மனைவிமார்கள்
கணவர்களின் ஆயுதத்தையே
ஆயுதமாக்க முன் வந்தால்
கணவர்கள் மராத்தான் ஓட்டம் தான்!
ஓரத்தில் இருந்தாலும்
ஒரு ஒளியை கொடுக்கும் எனக்கு ஒரு
ஒ !!!!!! போடுங்கள் ...
பின் குறிப்பு
அங்கிஹாரம் அளித்த
எழுத்து.காம் வளையத்திற்கு என்
அன்பான வணக்கங்கள் !