எதிரே ஒரு கன்னி

மதியநேரத் தெருவில்
அத்தி பூத்தாற்போல
எதிரே
ஒரு கன்னி !

வியர்வை
துடைத்து,
கலைந்த
தலை கோதி,
உடை சுருக்கம்
நீக்கி,
இவ்வாறெல்லாம்
அவளைப்பார்க்கத்
தயாராகி
அருகே சென்ற
வேளையில் .............

அனாயச
உதட்டுச்சுழிப்போடு
அலைபேசியைப்
பார்த்தபடி
அவள்
குனிந்த தலை
நிமிராமல்
கடந்து சென்றாள் !


என்ன ஒரு
புறக்கணிப்பு !!!


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (16-Mar-14, 2:04 pm)
Tanglish : ethire oru kanni
பார்வை : 360

மேலே