என்னுள் நீ
முன்றெழுத்து முழு நிலவே
தினம் நான் தொழும் அழகே
துங்கா நேரத்திலும் நான் காணும் கனவே
என் வாழ்வே
நீ வேண்டும் எனக்கு என்றும் ....
என் உயிரே , என் உயிரே
வசந்தமே , என் சுவாசமே ..
உன் விழி என்னிடம் தினம்
பேசுமே .. :)
மலர் கொண்டு காலை முகம் துடைபாயோ ??
உன் விழி கண்டு தினம் அவை துயர் கொள்ளுமோ ??;)
உன் இதழ்கள் விலகும் நேரம் ,
என் மனமும் தவிக்குமே !! ;)
நொடி பொழுதும் உன் ஞாபகம் ,
அடி பெண்ணே , பெண்ணே ....
உன்னை பார்க்கும் பொது ,
நிலத்தில் இருந்தும் பறக்கிறேன் ,
உன் சிரிப்பில் இந்த உலகையும் மறக்கிறேன் !!
உன்னை தவிர வேர் யாரிடமும்
பேச மனம் வரவில்லை ,
உன்மேல் நான் கொண்ட காதலுக்கு எது எல்லை!!
நாள் முழுதும் உன்னுடன் பேச
விரும்பி தவிக்கிறேன் ,
எவ்வளவு பேசினாலும் நீ பிரியும் பொது
மரணத்தின் வலியை உணர்கிறேன் ..
உன்னுடன் பேசாத நாட்கள்
என் மரண கணக்கில் சேரும் !! :/
மின்சாரம் பாயும் என்னுள்
நீ என் பெயரை சொன்னால் ,
என் கண்களும் உன்னை தேடும்
என் கட்டளைக்கு முன்னால் :P
இது எல்லாம் அடி பெண்ணே உன்னால் ;)
நீ செல்லும் பாதையை தினம் தேடுகிறேன் ,
அந்த பாதையில் ஒரு மரமாக மாற தினம் வேண்டுகிறேன் !!
சொல்ல ஆயிரம் இருந்தும்
உன் கண்களை பார்த்தல் உலகையே மறக்கிறேன்,
என்னை அறியாமல் நானும் சிரிக்கிறேன்
உலகோடு சேர்த்து , சொல்ல வந்ததையும் மறக்கிறேன் ;)
என் மனம் நினைப்பது
எல்லாம் சேர நினைக்கும் முகவரி
நீ தான் ,
அந்த வரிகளில் முதல் வரத்தை என்றும் உன் பெயர் தான் :P
என் உயிர் கேட்கும் உன் சுவாசத்தை
தருவாயா ?
இல்லை மறைவாயா ???
நீ பேசும் பொது ,
தமிழுக்கும் குளிர் காய்ச்சல் ...
நீ பேசமாட்டாயா என உலக மொழிகளுக்குள் ஒரே கூச்சல் .. :P
உன்னுடன் பேசாமல் இருக்க என் மனதால் முடியாது
என் உடலால் மட்டுமே முடியும் பிணமாக !!
------ கணேஷ் குமார் ...