ஹோலி ஜாலி வாடி

வண்ண வண்ண
வண்ணங்கள் ஒட்டிய
அங்கங்களில் பிறந்த
பட்டாம்பூச்சிகளாய்
என் எண்ணமெல்லாம்
சந்தோஷ சிறகுகள்.

அடடா.. அடடா..!
அவள் அழகு
மஞ்சள் முகமெங்கும்
என் எண்ணமேறிய
சாயல்களாய் ஆனந்த
சாயங்கள்....!
ஆசை வெட்கங்கள்..!


..............................................

அடியே ! உந்தன்
தாமரை குடத்தில்
அந்தி வானத்தை
தடவியது யாரு ?

அன்பே..! உந்தன்
நுரையேறிய பானையில்
கரும் மேகத்தை
கொட்டியது யாரு... ?

தூவியது யாரு?
தூவியது யாரு?
வண்ணத்தை தூவி
தங்கமேனியை
சீண்டியது யாரு ... ?

கண் விழிச்சு
நிறம் ஒதுக்கி
இங்கே பாரு..!
உந்தன் காதலன்
நான்தானடி பாரு..!

மானே..! மயிலே..!
வானவில்லை
ஒடித்து பொடித்து
வண்ண வண்ண
நிறங்களில் என்
எண்ண ஏக்கத்தை
பூரணமான காதலுடன்
கலந்த உந்தன்
காதலன் நானடி...
என்ன நாணமடி
வந்து கையப்பிடி

வாடி ..! வாடி ..! -என்னோடு
ஜோடி சேர்ந்துக்கோடி..!
பாடி..! பாடி...!
ஆடிடுவோமடி ..!
வசந்த கால
ஊஞ்சலில் இன்பமாய்
ஆடிடுவோமடி..!

ஹோலி..! ஹோலி ..!
ஜாலி ..! ஜாலி ..!
ஹைய்யா.........!


--------------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (16-Mar-14, 5:54 pm)
பார்வை : 406

மேலே