பாடல் வரிகளில் என் காயவலி

"" காதோடுதான் நான் பாடுவேன் ""
என்ற பாடலின் வரிகளுக்கு என்
வாழ்க்கை வலிகளை ,,,,,,,,,,,

நினைவோடுதான் தள்ளாடினேன்
சொல்லாலேதான் உயிர்வாடினேன்
என் வாழ்வையே கதையாக்கினேன்
என் நெஞ்சோடுதான் வலி தாங்கினேன்

நினைவோடுதான் தள்ளாடினேன்...
சொல்லாலேதான் உயிர்வாடினேன்
சோகத்தையே கதையாக்கினேன்
நெஞ்சோடுதான் வலி தாங்கினேன்

நினைவோடுதான் தள்ளாடினேன்

அழுகின்றேன் நான் இன்னும் உனக்காகத்தான்
இனி வரபோகும் துன்பத்தை நான் எண்ணித்தான்
திருந்தாமல் நீயின்றும் பிடிவாதமாய்?
திருந்தாமல் நீயின்றும் பிடிவாதமாய்?
தெரு வழியோடு பொய்பேசி ஏன் செல்கிறாய்?

நினைவோடுதான் தள்ளாடினேன்...

அன்பாலே என் உள்ளம் துடிக்கின்றது
அதை அறியாமல் உன் உள்ளம் சிரிக்கின்றது
அன்பாலே என் உள்ளம் துடிக்கின்றது
அது அறியாமல் உன் உள்ளம் சிரிக்கின்றது
எனதான இரு ஜீவன் தவிக்கின்றது
இதில் யாரோடு யார்வாழ விதி சொல்வது

நினைவோடுதான் தள்ளாடினேன்
சொல்லாலேதான் உயிர்வாடினேன்
என் சோகத்தையே கதையாக்கினேன்
என் நெஞ்சோடுதான் வலி தாங்கினேன்

என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (16-Mar-14, 10:23 pm)
பார்வை : 235

மேலே