+என்னை விட்டுவிடு+
என்னை விட்டுவிடு
கவிதை ஒன்றும்
எனைப்பற்றி எழுதாதே என்கிறாயே..!
நான் சொன்னால்
என் எழுத்தாணி
எங்கே கேட்கிறது?
அதற்கு
அழகைப்பார்த்தவுடன்
ஆராதிக்க வேண்டும்
அன்பை பார்த்தவுடன்
ஆர்ப்பரிக்க வேண்டும்
வேண்டாம் வேண்டாம்
என சொல்ல சொல்ல
அது தன்
வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது...
இனி
உனக்கும் எனக்கும்
வேடிக்கை பார்ப்பது மட்டும் தான் வேலை...
நீ
எழுத்தாணியை வேடிக்கை பார்..
நான்
உன்னை வேடிக்கை பார்க்கிறேன்..!