அடியே ஏ அழகி
அத்திப் பழச் செவப்பு
மகாராணி முக வெளுப்பு
புத்தம் போதனையும்
பொய்யாக்கும் உன் வனப்பு
அரை கால் படி உழக்கு
நிரம்பாத உம் பேச்சு
கிட்ட கிட்ட இழுக்குதம்மா
நீ வாங்கும் மேல் மூச்சு
பட்டி தொட்டி படுத்தி வைக்கும்
கால் கெடக்கும் கொலுசு மணி
கட்டங்கட்டி வளைக்கிதம்மா
உஞ் சிறுகோட்டு ரவுக்கத்துணி
கட்டிவச்சு அடிக்கிதம்மா
உங்கருஞ்சாம்ப கண்ணு ரெண்டு
அட காலக்கெடு முடுஞ்சு பின்னும்
மணக்குதம்மா மல்லிச் செண்டு
சிட்ட போட்டும் அடங்கலையே
மகராணி உன் அழகு
மச்சிலேரி அடஞ்சிருக்கேன்
மச்சக்காரி உன் மிச்ச அழகு