அங்கும் இங்கும்

ஒழுக்கத்தை வளர்க்கும்
தன்னம்பிக்கை தரும்
புத்தகங்களால்
நிரம்பியிருக்கிறது
அவனது க்டை
ஒருவரும் வரவில்லை
தனியாய் அமர்ந்திருக்கிறான்
அவன்

நிரம்பி வழிகின்றன
பேருந்துகள்
கார்ப்ரேட் கம்பெனியை
மிஞ்சுகின்றன
விளம்பரங்கள்
அலை மோதும்
கூட்டத்திற்கு
நடுவே அமர்ந்திருக்கின்றார்
ஒழுக்கத்தை குலைக்கும்
சாமியார்

எழுதியவர் : (19-Feb-11, 12:51 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 536

மேலே