கவிதை
கவிதை என்பது
வெள்ளை காகிதத்தில்
மென் சொற்களை
வரிசை படுத்தி , எதுகை
மோனை நடவு செய்து
இடை இடையே பூச்சொருகி
வர்ணமடித்து , வாசம் சேர்ப்பது
அல்ல ..
முனை ஒடிந்த காகித எழுது கோலால்
அழுக்கான காகிதத்தில்
குழந்தையின் கிறுக்கலாய்
'அம்மா ' என்று வரைந்தாலே
கவிதைதான்
வரைய முற்படுகிறேன்
க நிலவன்