கும்மி பாட்டு

தன்னனே நாதினம்
தன்னனே நாதினம்
தன்னனே தானே தன்னானே
தன்னனே தானே தன்னானே

நாடு யிழந்த தமிழர்களே-இங்கு
நல்லா வந்து கேளுங்களேன் -இது
நாட்டுப்புற கும்மிதாங்க-நம்ம
நாட்டுக்கான கும்மிதாங்க

மரணம் வென்ற மனிதர்கள்-அவர்
மானம் காத்த வீரர்களாம்
மானத்தமிழர் உறவுகளே-அம்
மாவீர்கள் கனவு குப்பையிலா?

காவல் காத்த தெய்வங்களோ
கண்மூடி உறங்குது கல்லறையில்
கல்லறை தெய்வங்கள் கனவுகளை
காண்போம் விரைவில் வாருங்களேன்

பூத்துக் குலுங்கும் சோலைகளாம்-இப்போ
சிங்கள நாத்தம் வீசுதம்மா
விழிகள் சிந்தும் நீரெடுத்து-இங்கு
விடுதலை விளக்கு எரியுதம்மா

நாதியத்த மக்களா நாம்-அட
நாடு எல்லாம் இருக்கமிங்க
நாடு எல்லாம் இருந்தென்ன-அட
நமக்கொரு நாடு வேணுமுங்க

வீட்டுச்சாவல் கூவுவதால்
விடிந்திடுமா சொல்லுங்களேன்
வீதியிறங்கி வாருங்களேன்
விண்ணை முட்டம் முழங்கிடுவோம்

ஒற்றுமை ஓங்கி ஒலிக்கட்டுமே
புலிக்கொடி வீசி பறக்குமிங்கே
ஒரே நாட்டுகுள்ள தீர்வுன்னு
ஒழருவன் வாயி சிதறட்டுமே

முற்றம் கட்டி கோவில் கொண்டோம்-அட
முன்னேறிச் செல்ல என்ன கண்டோம்
திராவிடமெனும் சந்தையிலே-அட
தமிழ் தேசியமதை அடகு வைத்தோம்

தன்னனே நாதினம்
தன்னனே நாதினம்
தன்னனே தானே தன்னானே
தன்னனே தானே தன்னானே

எழுதியவர் : வா.சி. ம.ப. த.ம.சரவணகுமார் (19-Mar-14, 11:00 pm)
பார்வை : 433

மேலே