+விழிச்சிதறல்+

நீ என்னை
ஒரே ஒரேமுறை தான் பார்த்திருப்பாய்
அந்தி மயங்கும் வேளையிலே
தூரத்திலே சூரியனின்
ஒளிச்சிதறல் கண்ணைக்கூச
பக்கத்திலே
பாவையுந்தன்
சிறுவிழி தாக்குதலில்
சிதறித்தான் போனதென் இதயம்
என்ன செய்ய
என்ன செய்ய
செய்ய நினைத்ததெல்லாம்
மறந்து போக
செய்கை அனைத்தும் மாறி
நீயாய் ஆக
பொய்யெல்லாம் பிடிக்காது
எனக்கு பேச
மெய்யான உன் விழித்தீண்டலில்
நான் மௌனமாக
காதல் பூவொன்று எந்தன் மனதில் பூத்ததோ
அதை
தூரம் மறையும் அந்த சூரியனும் பார்த்ததோ