வாக்கு கேட்டவரும் வாக்கு போட்டவரும் -சே பா

வெள்ளாவியில் வெளுத்த
வெள்ளாடை அணிந்து
வீதி வீதியாய் அலைந்து
வாக்கு கேட்பார்கள்,

நான் உங்கள் வீட்டு பிள்ளை
எனக்கு வாக்கிட்டு
வெற்றி பெற செய்திடுவீர்,
என்ற வாசகத்தை சொல்வார்கள்,

நாம் வெளுத்ததெல்லாம் பாலு
இனுச்சதேல்லாம் தேனுனு நம்பி
அவர்கள் வசனத்திற்கு வசப்பட்டு
நம் வாக்குகளை இட்டுவிடுவோம்!

வெற்றி பெற்றதும்
வக்கிட்ட வாக்காளரை
மறந்திடுவார்கள் !

அவர்கள் கொடுத்த
வாக்குகளை மறந்து
சொகுசு மாளிகையில்
கும்மாளம் அடிப்பார்கள்!

நமது வரிப்பணத்தில்
வசதியாய் குளிப்பார்கள்

வாக்கு கேட்டு ஒருமுறை
வந்தோரை நாம்
பலமுறை தேடிப்போயும்
பயனில்லாமை போயிடுமே!

வாக்குரிமையை விற்று
வாக்களித்தால்
வாயாடி பயனாவான்
வேட்பாளர்.....

தொகுதி குறை என்று
தேடி சென்றால் -நம்மை
குறை சொல்லி குறைத்திடுவான்
தெருநாயாய் ...

சேவை மனம் கொண்ட
செல்வமகன் எவனோ
நாம் கண்டு கணக்கிட்டு
கச்சிதமாய் வாக்கிட்டால்

கொடுத்த வாக்குறுதியை
கொட்டி தீர்ப்பார்கள் ....

விழிப்புடன் செயல்படுவோம்
வாக்களராகிய நாம் .....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (21-Mar-14, 10:13 am)
பார்வை : 254

மேலே