பாஷை

எண்ணகளுக்கு
வண்ணமடிக்கும்
தூரிகை ....

சைகை வனாந்தரங்களில்
வளர்த்த பூக்காடு ...

மனச்சிறகுகள்
பறக்க நினைக்கும்
போதெல்லாம்
திறந்திருக்கும்
மொழிகள் ....பாஷை ..

இருளும் பகலுக்கும்
வெளிச்சமாகும் இரவுக்கும்
மத்தியில்
உண்டாகும்
மௌன சப்தம்..

குயிலின் குரலில்
கண் விழிக்கும்
சூரியன் ..

அலையின் ஓசையில்
உடல் நெளியும்
மேகங்கள்...

காற்றின் சங்கீதத்தில்
தாளமிடும் இலைகள்...

மார்பின் மையத்தில்
துடிப்பின் விழிப்பு ..

புல்லும் பூவும்
விழிக்கும் சப்தம்

நீரும் நிலமும்
பேசும் ஓசை ..

இலைதுளிகளில்
ஒடிந்து விழும்
மலையின் கீதம் ..

மௌனத்திரைகளில்
கோடு கிழிக்கும்
ஒவ்வொரு முள்ளும்
இசையே ..

பாஷை ....
பரிமாணத்தின் பதவி .

இறந்து போன
செய்தி கேட்டு
அரண்டு போய்
எழுந்து வந்த
கண்ணீர்த்துளிகளின் பாஷை
சோகம்...

கண்டபோது பேசாமல்
இல்லாத போது
காதலிக்கும் மனதின் பாஷை
காதல் ...

மனக்காயங்களுக்கு
காலம் மட்டுமே
களிம்பு பூசும் . இது
கால பாஷை ...

என் உள்ளக்காதலில்
உள்ள ஆசை..
இது என்றோ விரியக்
காத்திருக்கும்
என் இதழ்களின்
பாஷை...


ஆசைகளோடு க.நிலவன்

எழுதியவர் : க நிலவன் (21-Mar-14, 7:09 pm)
Tanglish : paashai
பார்வை : 123

மேலே