மாலை நேரத்து மயக்கம்

தன் கடமை முடிந்ததால்
மறுபாதிக்கு கடமை செய்ய
கதிரவனும் செல்ல துவங்குகிறான்
கூடவே மேகங்களையும்
தன் துணைக்காய் அழைத்துக்
கொண்டு மறுபாதியை நோக்கி
மேகம் கலைந்ததால்
வானும் மெதுவாக
கருக்க தொடங்குது
வானத்து தேவதையின்
வருகைக்காய் வானம்
வெட்கம் கொண்டனவோ
தன்னுடலும் சிவந்து விட்டது
கண்ட காட்சிகள் யாவும்
என்னுடைய மனதைக்
கொள்ளை கொண்டன
என்னையும் மெய் மறந்து
மணலோடு மணலாய்
கடற்கரை தனில நானும்
கருமை சூழ்ந்த மேகத்
திரையை வெண்ணிற
ஆடை போர்த்தியே
பௌர்ணமியும் வெளிவருது
பௌர்ணமி நிலவும்
தரிசனம் தரவே
மணல் கொண்ட சூடும்
மெதுவாக தணிந்து போகுது