எங்களை கொஞ்சம் புரிஞ்சுப்பீங்களா

மழலைப் பருவத்தில்
மழலைச் செல்வம் என ரசிக்கின்றீர்கள்!

மலை மலையாய்
மனதில் மாசுக்களையும் விதைக்க்கின்றீர்களே!

மனம் எனும் வீடு
மணமாய் கட்டப்படுவதற்கு

மகிழ்ச்சியான சூழ்நிலை, அன்பு, சுதந்திரம் எனும்
செங்கற்கள் அவசியம்
மாறாக

கருத்து வேறுபாடு
கட்டளைகள், அழுகை ஒலி ,சண்டை காட்சிகள்
என

கண் முன் தினமும்
கண் கொள்ளா காட்சிகள் ..

மறக்க முடியாதவாறு மனதில் பதித்து
மன வளர்ச்சியை சிதைக்கின்றீர்களே!!

எது மறுக்க பட்டதோ
அதை மனம் நாடுகின்றது

அன்பை பெறாததால்
ஆதிக்க வாதிகளாய் மாறுகின்றோம்

சுய நலம் எனும் சோற்றை உண்டு வளர்ந்ததால்
சுற்றுபுறத்தை இழக்கின்றோம்

பொறுப்புகளை அளிக்காததால்
பொறுப்பற்று திரிகின்றோம் ..

சிறிய வட்டத்தில் அடைக்கப் பட்டதால்
பெரிய வட்டத்தில் நுழைய பெரும் பாடு
படுகின்றோம்

விதை விளையும் போது
அன்பு அரவணைப்பு எனும் உரத்தை அள்ளி
போட்டால்

ஆல மரமாய் விழுதிடுவோம் !

எங்களை கொஞ்சம் புரிஞ்சுப்பீங்களா??????

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (21-Mar-14, 11:01 pm)
பார்வை : 88

மேலே