தோழா நாமும் சாதிப்போம்

என் அன்புத்தோழா
என் முன்னே வாடா
எம் கைகள் சேர்த்து
உலகில் சாதிப்போம்

வானம் பெரிதா
பூமி பெரிதா
வாழ்ந்து நாமும்
பார்த்திடுவோம்

வியர்வை சிந்தாமல்
இனிப்பு சுவைத்திட முடியாது
துன்பம் இல்லாமல்
வாழ்வின் தூரம் அறிந்திட முடியாது ...

கண்கள் விழித்து கல்வி கற்றோம்
தூக்கம் தொலைத்து துறைகள் அறிந்தோம்
இங்கு
கண்கள் மூடியே வாழ்கின்றோம்
நிஜங்கள் மறந்து செல்கின்றோம்

அவன் பெயர் எழுத
மற்றவன் கை நாடும் ஒருத்தன்
அரசியல் செய்ய
மற்றவன் தலை எழுத்து மாற்ற தெரிந்த நாமும்
ஒரு பக்கம் சோர்ந்து நிற்கின்றோம்

போன காலம் போகட்டும்
புதிய காலம் நாமும் மாற்றுவோம்
நிஜங்கள் கூறி நிமிர்ந்து நிற்போம்

எழுதியவர் : நுச்கி மு.இ.மு (22-Mar-14, 12:29 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 146

மேலே