நவீன பாரதி

*********************************************************************
அன்னையை கண்டதில்லை நான்
ஆண்டவன் வடிவிலே!
இல்லை என்று சொல்லமாட்டேன் எனை
ஈன்ற தாய் அவள்தானே!
உண்மைகள் உரைத்திட முடியாமல்
ஊமையாகிப்போனாலும் என்னை...
என்றைக்கும் இழிந்திட மாட்டேன் - தமிழ்
ஏர்பூட்டும் உழவன் நான்!
ஐயம் இல்லா வாழ்க்கையிலே
ஒற்றுமையே இல்லையப்பா
ஓங்கார உலகத்திலே!
ஒளடதம் உன் நாவே!
கற்றாங்கு ஒழுகு என்பார்
காலனவன் வந்து விட்டால்- மற்றவர்க்கு
கிடைத்தது உன் வாழ்க்கைகல்வியாய்
கீறுபட்ட உன் வாழ்க்கையும்
குன்றிலிட்ட தீபமாய்
கூறிடலாம் வருங்காலம்!
கெக்கட்டம் போட்ட மாந்தரெல்லாம்
கேள்வி ஞானம் பெற்றிடுவர்
கைம்பெண்கள் வருங்காலத்தில்
கொடுத்திடு என்வாழ்வை என்பர் - அவர்கட்கு
கோபுரமாய் தீபமாய் நீயிருப்பாய் -உன்
கெளசல்யம் உலகிற்கே தெரிந்து விடும்
நீ சிறியவனாக இருக்கலாம் - உன்
முயற்சி பெரியவையாக இருக்கட்டும்
நவீன உலகத்தின் பாரதியாய் வாழ்ந்துவிடு
உலகம் உன்னையும் மறக்காது!
மறைக்கவும் முடியாது!
********************************************************************