பதிலறியா கேள்விகள்

பனி விழும் காலை பொழுதில்
பாவாடை தாவணி அணிந்து
பாதை கோலம் இடும்
கோதைகளை காண முடியவில்லை

அயல் கொண்டிருக்கும் கண்ணனை எழுப்ப
அபிராமி அந்தாதி பாடும் அந்தணர்களை காண முடியவில்லை

பாதையோர பச்சை புல் மீது
பனி துளி ஒன்றை
இச்சை தீர பார்த்த காலம் காணவில்லை

காரணங்கள் என்னவோ ???
கண்டதெல்லாம் கனவோ ???

காலங்கள் தான் கடந்தது
கோலங்கள் ஏன் மறைந்தது ??

சந்ததிகள் தான் மாறியது
அந்தாதி ஏன் மறைந்து போனது ???

இயந்தரங்கள் வந்தது
இயற்கை என்ன ஆனது ???

விடை தெரியா கேள்விகள்
படை எடுத்து வருகின்றது
விளக்குங்கள் யாரும் இதன் விளக்கங்களை

எழுதியவர் : அருண்குமார் கிருஷ்ணசாமி (22-Mar-14, 3:55 pm)
பார்வை : 156

மேலே