நீரை காப்போம் உலக நீர் நாள் - 22032014
நீரின் தேவை என்றும் தேவை
வாழும் உயிர்க்கு அடிப்படை தேவை
நீரும் வற்றி நிலமெல்லாம் காய்ந்தால்
நாளைய வாழ்க்கை கேள்வி தானே .....
குடிக்கும் நீரில் சிக்கனம் பாரு
முடிந்த அளவில் அதனை சேறு
ஆழ்துளை கிணற்றை இட்டு
அதனுள்ளே நீரை சேறு .....
குடிக்கும் நீரில் ஒவ்வொரு துளியும்
மதித்திட வேண்டும் ஒவ்வொரு நொடியும்
நாளைக்கு நமக்கு சேர்க்கும் சொத்தாய்
நீரையும் நாமே சேர்க்க வேண்டும் .......
மாசினை கொடுக்கும் தொழிலினை மாற்றி
நீர்நிலை அதனை நாமும் காப்போம்
குடிக்கும் நீரில் கலக்குமிந்த
கழிவை அகற்றி நீரை காப்போம் .......
ஆறு குலத்தை தூறு வாரி
அதனின் உள்ளே நீரை சேர்த்து
நிலத்தடி நீரின் அளவை ஏற்றி
நிம்மதியாக நாமும் வாழ்வோம் ........
காசுகொடுத்து தண்ணீர் வாங்கும்
அவலம் அதனை இன்றே தடுப்போம்
நாளை இந்த நிலையே தொடர்ந்தாள்
குவலயம் எல்லாம் கண்ணீர் சிந்தும் ......
நீரின் மாசால் நோய்கள் வருமே
மனித வாழ்வில் நிம்மதி கெடுமே
நிலைமை மாற்ற இன்றே முயல்வோம்
நீரை காத்து நாமும் வாழ்வோம் .......