மழலைத் தொழிலாளி

மொட்டொன்று அவிழப் பார்க்குது
கொடுமையின் மலட்டுக் காம்பினில் .....

பாவப்பட்ட பச்சை மண்
பால்யம் தொலைக்குது
வயிறு வளர்க்க ....

ஊமைத் தாலாட்டொன்ரு கதறி அழுகுது ...
உலை கொதிக்க ...

பிரபஞ்சத்தின் எதிர்காலம்
அன்னை மடி மறந்து ....
பளு தூக்குது
ஒரு பிடிச் சோற்றுக்கு ....

முல்லைப் பூவொன்று வசமாய்ப்
புதைந்துப் போனது
வறுமையின் சேற்றுக்குள் ....

வெகுளிப் பொம்மையொன்று ...
வலித்தும்
வாய் விட்டுச்சொல்ல மொழியறியாமல்
வாழ்கிறது ....
வலிக்குள்

படைத்தவன் வருவானோ
படியளக்க ....?/
பாவக் கதை முடிப்பானோ ..
பச்சிளம் பாலகனின் .......?/

எழுதியவர் : கீதமன் (22-Mar-14, 5:49 pm)
பார்வை : 78

மேலே