மலர்கள்
கண்ணீராய் பெய்த மழையில்
சிறு துளிகள் பருகி
மண்ணின் பெருமை
பேசும் வண்ண விளக்குகள்
இவை பூக்காத இடமெங்கும்
சோக தழும்புகள் ....
வறம்பு மீறிய மணம்
இதை படைத்தவனின் மனம்...
எழுதாத கவிகளுக்குள்
அப்பிக்கிடக்கும் இதன் குணம் ,..
வாடை காற்றின்
ஆடை மாற்றி
தென்றலோடு
திருமணம் செய்து
மென்மை காற்றோடு
புன்னகை செய்யும்
பூக்கள்...
சூராவளியால் இவைகள்
எண்ணிகொள்ளும் நாட்கள் ...
பெண்களை பெருமை
படுத்தும் பொன்பூக்கள்...
இவை முகம் மூடாமல்
தூக்கிட்டு சாகும் தியாகிகள்...
இறந்தவனின் இன்னல்
கண்டு கழுத்தில் விழும்
இவை உயிரோடு
மண்ணில் புதைந்து
மீண்டு வரும் ...
விதவைகளின் விரோதியாய்
வாழ்ந்து வருமோ?..
இவ்விதி விதித்தவனின்
வாழ்வு என்று
முற்று பெருமோ?..
மலர்களோடு க நிலவன்