தொண்டன் புலம்பல்
தொண்டனென பெயரேடுத்தோம்
சொந்த பந்தம் நாம் தொலைத்தோம்
தலைவனை தந்தை என்றோம்-அவர்
குடும்பமே சொந்தம் என்றோம்
தலைவன் முகம் பார்த்தே -நாம்
முகம் மலர்ந்தோம்
அவர் கை அசைவுக்காக
கைதியாய் நின்றோம்
கட்சிக் கொடி கையில்
ஏந்தி நடையாய்
நாங்கள் நடந்தோம்
எங்கள் கட்சி
ஆட்சிக்கு வந்தால்
அலப்பறையும் நாங்கள்
செய்தோம்
தப்பு செய்தாலும்
தலைவனை விட்டுக் கொடுத்ததில்ல
மப்பில் இருந்தாலும்
மாப்புள நாக்கு புரண்டதில்ல
சீட்டுக்கும் வரல -உந்தன்
நோட்டுக்கும் வரல
உன் அன்புக்காக வந்தோம் தலைவா
அடிமையாக நின்றோம் தலைவா
உனக்காக உழைக்கும்
உண்மைத் தொண்டன்
நாங்கள் தான்
இதை அறியாமல்
நடந்தால் தலைவா
அறியாமை உனக்குத்தான்
அவமானப்படுதினாலும்
அழைப்பிதழ் தராட்டினாலும்
கறை வேட்டி கட்டி
கறை படையா மனதுடன்
கடலென வருவோம்
கடலலையென எழுவோம்
வைகைமணி