உணர்ந்தேன் நான் ஆளானதாய்

கிழிந்த என் புத்தகப்பை ...
காட்டிக் களித்த ஏளன நண்பர்க் கொட்டம்
கண்டும் கொப்பளித்த கோபத்தை ...
பன்னீர்க் கொப்பளித்தது போல் ....
இன்முகத்துடன் இனிதே சமாளித்த
அந்நிமிடம் ....
உணர்ந்தேன்
நான் ஆளானதாய்



படிப்புக்கும் உனக்கும் ....
பல மைல் தூரம் ...
வீடு தேடி ஓடி நீயும் ....
பட்டியில் மாடு மேயென....
விஞ்ஞான ஆசான்
விரட்டிய வேளை.....
சாதிப்பேன் நானும் என ...
எனக்குள்ளும் ஓர் தீப்பற்ற
அந்நிமிடம்
உணர்ந்தேன்
நான் ஆளானதாய் ......



பக்கத்துக்கு வீட்டு
பரிமளம் அக்கா
வயதுக்கு வந்து
உட்கார்ந்த நேரம் ....
பார்க்க முடியாமல் ....
அவள் பக்கம்
வெட்கத்தில் நானும்
வெடித்து ஓடிய
அந்நிமிடம் ...
உணர்ந்தேன்
நான் ஆளானதாய்.....


பஞ்சு வைத்த
புகையிலையை .....
நெஞ்சு முழுதும்
புகை இழுத்து
தெரியாமல் ....
அப்பாவுக்கு
ஒழித்து வைத்து ....
ஊதிப் பார்க்க .....
ஆசை வந்த
அந்நிமிடம் .....
உணர்ந்தேன்
நான் ஆளானதாய் .....




எதிர்த்த வீட்டு
மாலினிப் பொண்ணு .......
போகையிலே ....
என் வீடு தாண்டி
அவள் போகும் வரைப் பார்க்காமல் ....
போகவிட்டு ரசித்துப் பார்த்த
அந்நிமிடம் ....
உணர்ந்தேன்
நான் ஆளானதாய் ......



பனைமரத்து கீழிருந்து ....
கள் அருந்தும் இளசொன்று.....
சுட்டு விரல் தொட்டு
என் இதழில்
துளிக் கள் தடவ ...
வேண்டும்
இன்னொரு முறை என்று ....
சுவைப் பார்க்க கெஞ்சிய
அந்நிமிடம் ...
உணர்ந்தேன்
நான் ஆளானதாய் .......



மதிப்பெண் அட்டையிலே ....
குறைந்த மதிப்பெண்ணை ...
கொஞ்சமும் பிசகாமல் .....
கூட்டி மாற்றி ....
பரிசாய் ...
அம்மாவிடம்
சட்டை வாங்கிய
அந்நிமிடம் ....
உணர்ந்தேன்
நான் ஆளானதாய்......



வழமைப் போல் குடித்துவிட்டு ....
அக்காவை அடிக்க வந்த ...
அத்தானின் சட்டைப் பிடித்து ....
அடிக்க நானும் ....
கையோங்கிய
அந்நிமிடம்
உணர்ந்தேன்
நான் ஆளானதாய்



பத்து வருடங்களாய்ப்
பார்க்கும் .....
பள்ளிக்கூட
பருவத் தோழியை ....
புதிதாய்ப் பார்ப்பது போல்....
பதுங்கிப் பயந்து ....
பார்த்த
அந்நிமிடம் ....
உணர்ந்தேன்
நான் ஆளானதாய் .....



அடுப்பங்கரைக்
கரியெடுத்து .....
அதரத்தின் மேலாக ....
அழகாய் மீசை வரைந்து ....
முறுக்க முயற்ச்சித்து ....
முடியாமல்
முகங் கருத்த .....
அந்நிமிடம்
உணர்ந்தேன் ....
நான் ஆளானதாய் ......

எழுதியவர் : கீதமன் (25-Mar-14, 7:12 pm)
சேர்த்தது : கீதமன்
பார்வை : 109

மேலே