அழகு
உன் பெண் அழகு
மொத்தத்தையும்
கவி வடிவில்
வடிக்கவே சிரமப்படுகிறேன்..
என் கற்பனை வளத்தை
திசை திருப்பியது
உன் விழியழகு...!
தொன்மைத் தமிழ்
கேட்கும் செவி அழகு...!
தேன் சுவை
தெரிக்கும் இதழ் அழகு...!
அற்புத பத்து
துளிப்பாவாய் விரல் அழகு...! வளைவு நெழிவுகளில்
பரவச அழகு...!
உனக்காக கிறுக்கும்
கிறுக்கள் கவியழகு...!
உன் பெயருடன்
என் பெயர் காவிய அழகு...!
உலக அழகின் பிறப்பிடம்...
எழில் சொல்லின் வசிப்பிடம்...
அழகு தமிழின் இருப்பிடம்... எல்லாமே
நீ மட்டும் தான்...