♥அவள் நினைவில் நான்-54♥

♥ஜதிகள் சொல்லும் உன்
கால் கொலுசில் என்
ஜாதி ஒழிததடி..!!!!♥

♥வீதியில் போகும் உன்
பாத சுவற்றில் என்
விதி மறைந்ததடி..!!!♥

♥நிழலில் வரையும் உன்
வண்ண ஓவியம் என்
நிஜத்தில் வாழுதடி...!!!♥

♥உயிரில் கரையும் உன்
எண்ண அலைகள் என்
உடலில் ஓடுதடி...!!!♥

♥நினைவில் நின்ற உன்
நிலவு முகம் என்
கனவில் வந்ததடி...!!!♥

எழுதியவர் : இதயவன் (25-Mar-14, 10:31 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 112

மேலே