சமுதாயம்
நவீன வசதிகளை செய்து கொடுத்தும் ,இன்னும்
ரவுடித் தனத்தை விடுவதாக இல்லை இங்கே!
புதுமைகள் யாவையும் நினைத்துப்பார்க்காமல்
ஒருவரை ஒருவர் தானென்ற ஆணவம் இங்கே!
நாலும் தெரிஞ்ச நல்லவர்கள் உள்ளனர் இங்கே!
ஒருஊரென்ற ஒற்றுமை கடுகளவும் இல்லை இங்கே!
நியாதிபதிகள் படித்தவர்கள் அதிகமிருந்தும்
இதுவரை .பிரட்சனைக்கு ஒரு தீர்வு இல்லை
முரண்பாடுகளையும், சமூக சீர்கேடுகளையும்
ஏற்ற தாழ்வு என்ற பிழவுகளுடன் இணைந்து
இளம் தலைமுறையினருக்கு கற்பிக்கின்றோம்
சொந்த ஊரென்ற நினைவுநெருடி
நீதியை கேட்டெழுத நினைக்கின்றேன்
மனிதர்களே மன்றாடிக் கேட்கின்றேன்
பதவி என்ற சிம்மாசனம் வேண்டாம்
ரத்தம் குடிக்கும் பிசாசுகள் வேண்டாம்
விடியலுக்குள் செல்ல விரும்பிக் கேட்கின்றேன்.
இந்த மன்றத்தில் ஓடி வந்து சில்லறை போல்
சிந்தும் சிறார்களின் சிரிப்பினை கேட்கின்றேன்